ADDED : மார் 08, 2010 04:18 PM

* ஒவ்வொருவனுக்கும் எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென அறியும்படி, உங்கள் பேச்சானது எப்போதுமே இனிதாகவும் உப்பின் சாரமுள்ளதாகவும் இருக்கட்டும்.
* உங்கள் பேச்சு பேராசையில்லாது இருக்கட்டும். உங்களிடம் உள்ள பொருளே போதுமென்று திருப்தியுடன் வாழுங்கள்.
* தந்தையை நையாண்டி செய்து தாய்க்கு அடங்காமல் நிந்திக்கும் கண்ணை நதிக்கரைக் காகங்கள் பிடுங்கும். இளங்கழுகுகள் அதைத் தின்னும்.
* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே.
* உன் நெஞ்சிலிருந்து வருத்தத்தை நீக்கிவிடு. உன் சதையிலிருந்து தீமையை எடுத்துவிடு. ஏனெனில், குழந்தைமையும் இளமையும் வெறும் பிரமையே.
* மமதை பிடித்தவர்களையும், உள்ளூரப் பொய்களின் பக்கம் திரும்பியவர்களையும் மதிக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைத்திருக்கும் மனிதன் பாக்கியவான்.
* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொது ஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.
-பைபிள் பொன்மொழிகள்